என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அசாதுதீன் ஒவைசி
நீங்கள் தேடியது "அசாதுதீன் ஒவைசி"
எம்.பி. ஒவைசியின் காருக்கு துணிச்சலுடன் அபராதம் விதித்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தான்கிதியை சோலாப்பூர் நகர போலீஸ் கமிஷனர் ஹரிஷ் பைஜால் நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்.
எம்.பி.யின் காருக்கு துணிச்சலுடன் அபராதம் விதித்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தான்கிதியை சோலாப்பூர் நகர போலீஸ் கமிஷனர் ஹரிஷ் பைஜால் நேரில் அழைத்து ரூ.5 ஆயிரம் வெகுமதி அளித்து பாராட்டினார்.
மும்பை:
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி நேற்று மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் நகருக்கு வந்தார். அங்கு சதார் பஜார் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க சென்றார். அப்போது வெளியே நிறுத்தப்பட்ட எம்.பி.யின் காரின் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதை, அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தான்கிதி என்பவர் கவனித்தார். இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக எம்.பி.யின் கார் டிரைவரிடம் ரூ.200 அபராதம் செலுத்தும்படி கூறினார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அசாதுதீன் ஒவைசி எம்.பி.யின் ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். இதனால் பரபரப்பு சூழல் உருவானதால் அங்கு போலீஸ் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். ஆனால் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.பி.யின் காருக்கு அபராதம் விதிப்பதில் உறுதியாக இருந்தார். இதனால் வேறு வழியின்றி எம்.பி.யின் கார் டிரைவர் ரூ.200 அபராதம் செலுத்தினார்.
இந்தநிலையில் எம்.பி.யின் காருக்கு துணிச்சலுடன் அபராதம் விதித்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தான்கிதியை சோலாப்பூர் நகர போலீஸ் கமிஷனர் ஹரிஷ் பைஜால் நேரில் அழைத்து ரூ.5 ஆயிரம் வெகுமதி அளித்து பாராட்டினார்.

கருப்பு சட்டத்தினால் 700 விவசாயிகள் தங்களது உயிரை இழந்துள்ளனர் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
வேளாண் சட்டங்களின் பயன்களை ஒரு தரப்பினருக்கு புரிய வைக்க முடியவில்லை என்றும், விவசாயிகள் நலன் முக்கியம் எனவும் தெரிவித்தார்.
மோடி அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாராட்டுவதற்கு முன் விமர்சனத்தையும் முன் வைக்கின்றனர்.
அந்த வகையில் எ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது கருத்தை தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது குறித்து அசாதுதீன் கூறியிருப்பதாவது:
முதல் நாளில் இருந்தே மூன்று வேளாண் சட்டங்களும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று எதிர்கட்சிகள் சொல்லிக்கொண்டு வந்தன. மோடி அரசு இதுபோன்ற சட்டங்களை உருவாக்க, மோடி அரசுக்கு அரசியலமைப்பு உரிமை இல்லை. மோடியின் ஈகோவை திருப்தி படுத்தவே இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கருப்பு வேளாண் சட்டங்களால் 700 விவசாயிகள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.
மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்திருந்தால், இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்காது. விவசாயிகள் உயிர் இழந்திருக்கமாட்டார்கள். இது மிகவும் காலதாமதமான முடிவு. பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும்போது இந்த அரசு பயப்படும் என்று நான் எப்போதுமே கூறுவேன். இந்த வெற்றி அனைத்து விவசாயிகளுக்கும் உடையதாகும்.
இவ்வாறு ஒவைசி தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என மஜ்லிஸ்கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan
ஐதராபாத்:
இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியா போன்ற சிறந்த நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதற்கு இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என்று ஒவைசி கூறினார்.
தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan
இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி, இன்று வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக இம்ரான் கான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஐதராபாத் பாராளுமன்ற தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். #AIMIM #AsaduddinOwaisi #HyderabadLSseat
ஐதராபாத்:
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரான அசாதுதீன் ஒவைசி கடந்த 2004 முதல் 15 ஆண்டுகளாக ஐதராபாத் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இதே தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிட தீர்மானித்த ஒவைசி இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘வறுமையின் பிடியில் சிக்கி நலிந்த நிலையில் உள்ளவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் தேசிய குரலாக இந்த ஐதராபாத் பாராளுமன்ற தொகுதி காலகாலமாக இருந்து வந்துள்ளது. இது இனியும் தொடரும்’ என குறிப்பிட்டார்.
இந்த தேர்தலில் ஒவைசிக்கு ஆதரவு அளிப்போம் என தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #AIMIM #AsaduddinOwaisi #HyderabadLSseat
பாராளுமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து ஐதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா? என பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு மஜ்லிஸ் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். #Owasidares #LSelection #Amitshah
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐதராபாத் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என குறிப்பிட்டார். ஆரம்பத்தில் ஒரேநாடு - ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த தெலுங்கானா ராஷ்டரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், தனது சுயநலத்துக்காக சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு, உடனடியாக தேர்தல் வைக்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ஐதராபாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாடுல்-முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, வரும் பாராளுமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து ஐதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா? என பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் தற்போதுள்ள 5 எம்.பி.க்களையும் வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இழந்துவிடும் என்றும் ஒவைசி தெரிவித்துள்ளார். #Owasidares #LSelection #Amitshah
×

X